*அருள்மிகு ஸ்ரீ வடபத்திர காளியம்மாள் தேவஸ்தான சக்திவிழா நிகழ்பட காட்சிகள்.. தற்போது இனையதளத்தில்.. *அனைவரும் வருக! அம்பாளின் பேரருளைப் பெறுக!!
 
 
 
 
 
Picture
அருள்மிகு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் தேவஸ்தான வருடாந்த சக்தி விழா 19/06/2012 செவ்வாய் கிழமை கதவு  திறத்தலுடன் ஆரம்பமாகி 27/06/2012 புதன்கிழமை தீ மிதிப்புடன் நிறைவு பெறும்..

.....அனைவரும் வருக! அம்பாளின் பேரருளைப் பெறுக!! ......


 
 
ஓந்தாச்சிமடம் ஸ்ரீ வடபத்திரகாளியம்மனின் கலைக்கோயிலுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றபோது எடுக்கப்பட்ட காட்சிகள்............

--== இதன் நிகழ்பட தொகுப்பினை பார்வையிட ==--
--== இதன் புகைப்பட தொகுப்பினை பார்வையிட ==--

 
 
அருள்மிகு ஸ்ரீ வடபத்திர காளியம்மாள் தேவஸ்தான வருடாந்த சக்தி விழா ஆனி உத்தர புண்ணிய தினத்தை உள்ளடக்கியதாக 15/06/2010 செவ்வாய் கிழமை கதவு  திறத்தலுடன் ஆரம்பமாகி 23/06/2010 புதன்கிழமை தீ மிதிப்புடன் நிறைவு பெற்றது .

  ஆனி உத்தர புண்ணிய தினமான 19/06/2010 சனிக்கிழமை காலை 10 மணியளவில் ஸ்ரீ வடபத்திர காளி அம்பாளினதும் தேவஸ்தானத்தினதும் மகிமை உலகெங்கும் பரவும் உன்னத நிகழ்வு நடந்தேறியது

     இதில் தேவஸ்தானம் பற்றியதும் தேவஸ்தானத்தோடு தொடர்புடைய ஏனைய விடையங்களை பற்றிய இணையதளத்தினை தேவஸ்தான தலைவர் அவர்களின் தலைமையில் எமது கிராம ஆலயங்களின் குருமார்களின் ஆசியுடன் உள்ளூர்,வெளியூர் ஆலயங்களின் நிர்வாகசபை முக்கியஸ்தர்கள், ஏனைய அமைப்புகளின் முக்கியஸ்தர்கலுடனும் எமது பிரதேச பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள்முன்னிலையில் கல்லடி இராமகிருஷ்ண மிஷன் சுவாமி அகரத்மானந்தா அவர்களுடன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பொன் செல்வராசா மற்றும் கௌரவ  அரியநேந்திரன் அவர்களாலும் சுப நேரத்தில் மங்களகரமாக திறந்துவைக்கப்பட்டது     
                                                                                                                                    (இதன் நிகழ்பட தொகுப்பினை பார்வையிட)


தொடர்ந்து விஸ்வ பிரம்மம் வை.இ.எஸ்.காந்தன் ஐயா அவர்களால் இயற்றப்பட்டு அவுஸ்திரேலிய வாழ் அம்பாள் அடியார்களான
  • திரு.கோ.ஜனபாலச்சந்திரன்
  • திரு.ச.தவேந்திரன் 
  • திரு.யோ.உமாகாந்தன் 
  • திரு.ந.கனகராஜ்
ஆகியோர் அனுசரணையில்உருவான ஸ்ரீ வடபத்திரகாளியம்பாள் அருட்பாடல்கள் கொண்ட இறுவெட்டு வெளியிட்டுவிழா இணையதிறப்புவிழாவில் கலந்துகொண்ட பிரமுகர்களுடன் உள்ளூர்,வெளியூர் ஆலயங்களின் நிர்வாகசபை முக்கியஸ்தர்கள், ஏனைய அமைப்புகளின் முக்கியஸ்தர்கலுடனும் எமது பிரதேச பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சுப நேரத்தில் மங்களகரமாக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.


                                                                                                                                        (இதன் நிகழ்பட தொகுப்பினை பார்வையிட)